Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருட்டுப் போன ஷாலு ஷம்முவின் மொபைல். போலீஸ் விசாரணை

shalu-shammu-is-looking-for-rs-2-lakh-mobile

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இவர் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மிஸ்டர் லோக்கல்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்று வாங்கியுள்ளார்.

கடந்த 9-ஆம் தேதி இரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணாமல் போனதை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக பட்டினபாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.

மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

shalu-shammu-is-looking-for-rs-2-lakh-mobile
shalu-shammu-is-looking-for-rs-2-lakh-mobile