Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படம் பார்க்க வந்த ஷாலினிஅஜித். புகைப்படம் வைரல்

shalini-ajithkumar-photos

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் நேற்றைய முன்தினம் பொங்கல் திருநாளை முன்னிட்டு துணிவு திரைப்படம் கோலாகலமாக வெளியானது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வெற்றி நடை போட்டு வருகிறது.

தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக பேசப்பட்டு வரும் இப்படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் தல அஜித்தின் மனைவியும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையுமான நடிகை ஷாலினி அஜித்குமார் துணிவு திரைப்படத்தை காண வந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது ஃபோர் ஃப்ரேம் திரையரங்கில் துணிவு திரைப்படத்தின் பிரிவியூ ஷோவை காண வந்த நடிகை ஷாலினி அஜித் குமாருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.