தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வரவேற்பு தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. குணசேகரன் இயக்கத்தில் புராண கால காதல் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் தேவ் மோகன் நாயகனாக நடிக்க நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் இம்மாதம் வரும் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இத்தகவலை வைரலாக்கி வருகின்றனர்.
The Love that was forgotten… An unforgettable tale of Love that remains????#Shaakuntalam in theatres worldwide on April 14????@Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @tipsofficial @tipsmusicsouth #ShaakuntalamOnApril14 pic.twitter.com/TKFPSPpwEw
— Sri Venkateswara Creations (@SVC_official) February 10, 2023