தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா கவுடா.
இந்த சீரியலை தொடர்ந்து இதே சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பான செவ்வந்தி என்ற சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலர் பார்கவ் என்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
