Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவி சீரியல் நடிகைக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு.யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

serial-actress-turns-into-movie-heroine chance

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகைகளாக விளம்பர தொடங்கி பிறகு வெள்ளித் துறையில் ஜொலிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன் போன்ற நடிகைகள் இன்று வெள்ளித்திரையில் பிஸியாக இருந்து வருந்தாலும் இவர்களுக்கு அஸ்திவாரம் போட்டது சின்னத்திரை தான்.

தற்போது இவர்களது லிஸ்டில் இணைந்துள்ளார் சன் டிவி சீரியல் நடிகை ஹேமா பிந்து. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமடைந்த இவர் அந்த சீரியல் நிறைவடைந்த கொஞ்ச நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இலக்கிய தொடரில் நடித்து வருகிறார்.

இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் பங்கேற்ற போட்டோக்களை வெளியிட்டு இது குறித்து அறிவிக்க ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் போல இவருக்கும் வெள்ளித்திரையில் பிஸியான நடிகையாகும் வாய்ப்பு கிடைக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

serial-actress-turns-into-movie-heroine chance
serial-actress-turns-into-movie-heroine chance