தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சன் டிவியில் ஒளிபரப்பாகிய கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முக பிரியா.
பாடி பில்டர் அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையால் சீரியல்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவு ஷண்முக பிரியா வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோகங்களை கடந்து தனது கணவருடனான நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார். தினமும் சமூக வலைதளங்களில் அவரை பற்றி பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள லட்சுமி சீரியலில் நடிக்க இருப்பதாகவும் உங்களின் ஆதரவு தேவை என்றும் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram

