Selvaraghavan who constantly shares life's experience
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் செல்வராகவன் பதிவிட்டது, “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு” கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல” என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் செல்வராகன் தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் நம் மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும்! என்று குறிப்பிட்டு, அவர் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமாராக நடித்த தனுஷின், வலிக்கல கொஞ்சம் கூட வலிக்கல என்ற வசனத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. தொடர்ந்து செல்வராகவன் இதுபோன்ற பதிவுகளை பதிவிட்டு வருவதால் ரசிகர்கள், செல்வராகவனுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…