தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணியை இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்குனராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், ‘ஃபர்ஹானா’ படத்தை பற்றி என்ன சொல்வது. என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இதனை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழகாக மாற்றியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் அழகுப்படுத்தியுள்ளார். இது போன்ற காவிய படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை. தயாரிப்பாளர் பிரபு சாருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
#Farhana what do I say ! It’s one of the best scripts I have heard in my life ! And @nelsonvenkat converted it beautifully ! @aishu_dil is simply fantastic. I’m so glad I’m part of such a poetic film. Kudos to @prabhu_sr sir????????
— selvaraghavan (@selvaraghavan) May 12, 2023