Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் பிரியங்கா. அதிர்ச்சியில் ரசிகர்கள்

seethraman serial fame leaving the show update

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சீதாவாக நடித்து வரும் பிரியங்காவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. சீரியலில் நடித்துக் கொண்டு வந்த போது திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தன்னுடைய கணவரின் கட்டுப்பாடுகளால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஒரு மாதத்திற்கு முன்னரே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசி நாள் சூட்டிங் என போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் இல்லாமல் சீதாராமன் சீரியல் இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதே சமயம் வரும் நாட்களில் பிரியங்காவுக்கு பதிலாக சீதா கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார் என்று கேள்வியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

seethraman serial fame leaving the show update
seethraman serial fame leaving the show update
seethraman serial fame leaving the show update
seethraman serial fame leaving the show update