Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்த படத்தில் இணையும் சீதாராமம் படக்குழு கூட்டணி.. வேற லெவல் சூப்பர் ஹிட் தகவல்

seetharamam-movie-team-ready to upcoming-movie

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டி அவர்களின் மகன் தான் துல்கர் சல்மான். பிரபல மலையாள நடிகர் ஆன இவர் இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “சீதா ராமம்” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களாக ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். சப்னா சினிமா தயாரித்துள்ள இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிட்டுள்ளது. அழகான காதல் கதை அம்சத்தை கொண்டிருந்த இப்படம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த ‘சீதா ராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி அடுத்த படத்தை இயக்க தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ‘சீதா ராமம்’ படத்தை தயாரித்த அஸ்வினி தத் இந்த படத்தை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும், அப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்தப் படம் ‘சீதா ராமம்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இயக்குனரும், தயாரிப்பாளரும் இன்னும் உறுதி செய்யவில்லை என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

seetharamam-movie-team-ready to upcoming-movie
seetharamam-movie-team-ready to upcoming-movie