Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயின் படங்கள் வெற்றியடைய இதுதான் காரணம்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்

seenu-ramasamy-talk-about-vijay

தமிழ் சினிமாவில் மாபெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் இன்றும் தமிழ் சினிமாவில் முக்கிய படைப்புகள் ஆகவே பார்க்கப்படுகின்றது. அப்படிப்பட்ட சிறப்பினை பெற்றுள்ள பாலுமகேந்திராவிடம் சிஷ்யர்களாக பணியாற்றியவர்கள் தான் வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் போன்றவர்கள்.

அதில் தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்காக நடத்தப்பட்ட பிரமோஷனில் இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் விஜயை பற்றி பேசியிருக்கிறார். அது என்னவென்றால் அவர் தனது குருநாதரான பாலுமகேந்திரா உடன் காரில் சென்றிருக்கிறார். அப்போது மிகவும் பிரபலமான நடிகராக வளர்ந்து வந்த விஜயின் வீட்டின் முன்னால் ரசிகர்கள் கூட்டமாக விஜய்யின் முன்நின்று இருப்பதை பார்த்துள்ளார்கள்.

அதன்பின் விஜய்யின் புகைப்படத்தை பார்த்து பாலுமகேந்திரா சீனு ராமசாமியிடம் “இந்தப் பையனுக்கு ஏன் ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு வரவேற்பு தெரியுமாடா” என்று கேட்டிருக்கிறார். அதற்கு சீனுராமசாமி அவரின் படங்கள் வெற்றியடைவது தான் காரணம் எனக் கூறியிருக்கிறார். அதற்கு பாலு மகேந்திரா அவர்கள் இல்லை, விஜயின் முகம் பூனைகள் குடும்பத்தை சேர்ந்தது, இந்த மாதிரியான முக அமைப்பு உள்ளவர்கள் எப்போதும் அதிக கவனத்தை ஈர்பவர்களாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதாக சீனு ராமசாமி பேட்டியில் பேசியுள்ளார்.

seenu-ramasamy-talk-about-vijay
seenu-ramasamy-talk-about-vijay