Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய சீமான்

seeman-viral-news-about thalpathy vijay

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு சில நற்பணித் திட்டங்களை செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி எடுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார். அப்போது அரசியல் குறித்தும் மேடையில் பேசிய விஜயின் கருத்திருக்கு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இது குறித்து பிரபல நடிகரும், இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் அளித்திருக்கும் பேட்டியில் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், விஜய் அரசியலுக்கு வந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று விஜய் கூறிய கருத்தை மறுக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். மேலும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வழங்குவது என்பது தற்போது வரை தொடர்கதையாக தான் இருந்து வருகிறது என்றும் விமர்சனம் செய்துள்ளார். இவரது இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

seeman-viral-news-about thalpathy vijay
seeman-viral-news-about thalpathy vijay