Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 69 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

sathyan-suriyan-joined-in-thalapathy-69 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இவர்கள் கூட்டணி உறுதியாகி விட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், கைதி ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடப்பட்டது.

sathyan-suriyan-joined-in-thalapathy-69 movie
sathyan-suriyan-joined-in-thalapathy-69 movie