Sathish movie gets Naai Sekar title
பிகில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி உள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அதன்படி இப்படத்திற்கு ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்துக்கும் ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் அந்த தலைப்பு சதீஷ் படத்துக்கு கிடைத்துவிட்டதால், தற்போது வடிவேலு படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதனால் வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘மீண்டும் நாய்சேகர்’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என இவற்றுள் ஏதாவது ஒரு தலைப்பை வைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…