sasikumar-tweet-about-pugazh marriage wishes
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிசயமானவர்தான் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் தனது நகைச்சுவையை தாறுமாறாக வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்து தற்போது வெள்ளி திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தற்போது பிசியான நடிகராக வலம் வரும் புகழ் “ஜூ கீப்பர்” என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த பென்சியா என்கின்ற பெண்ணை செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று காலை சிறப்பாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் அன்பு தம்பி புகழ், பென்சி இருவரும் இணைந்த இந்த சிறந்த நாளில் என்றும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்க வாழ்த்துகிறேன்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…