தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி மேட்ச் பாக்க ரெடியா? ரோஷமான ஆங்கில குத்துச் சண்டை போட்டியின் ரவுண்டு 2 விரைவில் என குறிப்பிட்டு போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதனை ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர்.
Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட???? Round 2️⃣#Sarpatta2 விரைவில்????????????
A @beemji film @officialneelam #TheShowPeople @NaadSstudios #JatinSethi @kabilanchelliah @pro_guna @gobeatroute pic.twitter.com/z00LlbFq5B
— Arya (@arya_offl) March 6, 2023