தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் 10 மொழிகளில் தயாராகி வருகிறது.
மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் இசை உரிமையை சரிகம கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்ட இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகிறது.
Let the Music of Victory and valiancy resonate with grandeur!
The audio rights of #Suriya42 acquired by @saregamasouth ????#Suriya42WithSaregama#Saregama
???? A @ThisIsDSP Musical
✍️ @Viveka_Lyrics @madhankarky@Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @kegvraja pic.twitter.com/vlJVz08JYl— Studio Green (@StudioGreen2) April 15, 2023

