Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சரவண விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்.முழு விவரம் இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இருப்பவர் சரவண விக்ரம். பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அந்த சீரியல் முடிவுக்கு வரும் தருவாயில் கிடைத்த பிக் பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

ஆனால் ஆரம்பம் முதலில் போட்டியில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் மாயா டீமில் ஐக்கியமாகி இருந்து வந்த இந்த வாரம் நாமினேஷன் பற்றி இடம் பெற்றதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஒரு நாளைக்கு 15000 முதல் 18000 வரை சம்பளம் வாங்கிய இவர் மொத்தமாக 83 நாட்களுக்கு மொத்தமாக 15 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saravanan Vikram salary update
Saravanan Vikram salary update