Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘கொம்புசீவி’ பட முன்னோட்ட விழாவில் சரத்குமார் வைத்த முக்கிய கோரிக்கை!

Sarathkumar's important request at the 'Kombuseevi' film preview event!

‘கொம்புசீவி’ பட முன்னோட்ட விழாவில் சரத்குமார் வைத்த முக்கிய கோரிக்கை!

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‘படைத் தலைவன்’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொன்ராம் இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 19-ந்தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசி சரத்குமார்,

‘ஒரு திரைப்படம் வெளியான பிறகு குறைந்தது 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று ஓடிடி நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போது, ஒரு படம் வெளியான 4 அல்லது 5 வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கொம்புசீவி’ படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படத்திற்கான கதை தயார் என இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயனுடன் பேசி அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sarathkumar's important request at the 'Kombuseevi' film preview event!