வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பரத், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார். வெப் தொடரில் நடிக்கும் சரத்குமாரின் தோற்றங்களையும் வெளியிட்டு உள்ளார். அதில் சரத்குமார் நீளமான தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டலான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.
இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. சரத்குமார் நடிக்கும் வெப் தொடருக்கு ‘பேர்ட் ஆப் பிரே த ஹண்ட் பிகின்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். கவுதம் மேனன் உதவியாளர் பிரவீன் நாயர் இயக்குகிறார். சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ஏ.வேங்கடேஷ் இயக்கும் பாம்பன் ஆகிய படங்களிலும் சரத்குமார் நடிக்கிறார்.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…