தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, நடிகர் சாம், ஸ்ரீகாந்த் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். அதேபோல் நடிகைகளில் குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் நடிக்கின்றனர்.
இந்த படம் பற்றி தற்போது சரத்குமார் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது. அந்த பேட்டியில் வாரிசு படம் பற்றி கேட்க இது எமோஷனல் ஆன திரைப்படம் நிச்சயம் ரசிகர்களோடு கனெக்ட் ஆகும் வகையில் இருக்கும். வம்சி இயற்றிய படங்களைப் போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் இதை பார்க்கும் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும் என கூறியுள்ளார்.
சரத்குமார் கூறிய இந்த விஷயங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளன.
.@realsarathkumar about Thalapathy ❤️#Varisu @actorvijay pic.twitter.com/Xqw9QrDNkZ
— Namakkal OTFC (@Namakkal_OTFC) August 17, 2022