தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிலையில் சரத்குமார் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி 66 சூட்டிங் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் கதை சக்தி வாய்ந்தது. அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
