Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இணைந்த பிரபல நடிகை,வைரலாகும் பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை, ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா தொரட்டி.

ஆனால் இவர் நடித்த சீரியல் எல்லாம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த சரண்யா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நாகராஜூடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு நடிக்க வந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் பலரும் சரண்யாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஒருவேளை இவர் தான் சரவணனுக்கு ஜோடியோ எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.