Samantha to replace Nayantara in Bollywood film
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் முடங்கி உள்ளது.
படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், இப்படத்தில் இருந்து நடிகை நயன்தாரா விலக முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]