விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட சமந்தா.. வைரலாகும் புகைப்படம்

நாக சைதன்யா – சமந்தா திருமண பிரிவுக்கு பிறகு நாக சைதன்யாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை ’ஓ பேபி’ படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகின. இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தா இருவரும் இணைந்து நடித்து வெளியான மஜிலி என்ற படத்தின் 3 ஆண்டு நிறைவு செய்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Samantha shared a photo of Naga Chaitanya
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

20 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

20 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

20 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

20 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

20 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

20 hours ago