தமிழ் பெண்ணான சமந்தா சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி போன்ற படங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயின்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இவர் சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் “உ சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு நடனம் ஆடி அதிக வரவேற்பை பெற்றிருந்தார்.
இதனால் தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கியுள்ளதால் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதாவது ரூ3.5 கோடியாக நடிகை சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சம்பளத்தை உயர்த்திய சமந்தா pic.twitter.com/Yh2qVUmLoS
— Dinamalar (@dinamalarweb) August 28, 2022