samantha host bigg boss show
தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3-வது சீசனையும் தற்போது நடந்து வரும் 4-வது சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.
‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார்.
அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 3-வது சீசனின் போது நாகார்ஜுனா சில காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…