சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.
தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.
இதை நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் ஏற்று மரம் நட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். அவரது சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருக்கிறார் சமந்தா.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…