Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரிஸ் சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம். இசையமைப்பாளர் சாம் சி. எஸ் பேச்சு

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘லேபில்’. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான ‘லேபில்’ தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த வெப்தொடர் நாளை (நவம்பர் 10) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியதாவது, ஹாட் ஸ்டாருக்கு நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. சீரிஸ் என்றாலே டிவி நாடகத்துக்கு அடுத்த கட்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம். வரும் காலத்தில் சினிமாவை விட வெப் சீரிஸ் தான் பெரிதாக இருக்கும். நான் செய்து வரும் சீரிஸ்களே அதற்கு சாட்சி. அதில் ஒன்று தான் லேபில்.

நமக்கு என்று ஒரு அடையாளம் தேவை என்பதை எல்லோருமே நினைப்போம், அது மாதிரி அடையாளப் பிரச்சனையைச் சொல்லும் சீரிஸ் தான் இது. இதில் மூவி மாதிரி தான் வேலை பார்த்தோம். பாடல் எல்லாம், ஒரு கமர்ஷியல் படம் போலவே இருக்கிறது. எங்கள் டீமின் உழைப்பு உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். அருண் ராஜாவுடன் உழைத்தது மிக மகிழ்ச்சி. ஜெய் உடன் படம் செய்திருக்கிறேன், ஆனால் இந்த சீரிஸில் அவர் தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி நடித்திருக்கிறார். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். மிகச்சிறப்பான சீரிஸாக இருக்கும் என்று பேசினார்.

Sam CS latest update viral
Sam CS latest update viral