Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமண கோலத்தில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் சல்மான் மற்றும் ஷெரின்,வைரலாகும் பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் மௌன ராகம். இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக ரவீனா நடித்த ஹீரோவாக சல்மான் நடித்திருந்தார்.

மேலும் வில்லியாக ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷெரின். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு வெப் சீரிஸ் தொடரில் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு எங்கேஜ்மென்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இருவரும் ரொமான்டிக்காக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சல்மான் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.