Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெற்றி பெற்ற சலார்… கேக் வெட்டிய படக்குழு.வைரலாகும் பதிவு

salaar-movie-success-meet photos viral

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.இந்நிலையில், ‘சலார்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.