Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“சாலார்” படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு

salaar movie release date update

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. இதையடுத்து ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘சலார்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.