salaar-movie latest update viral
“இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது.இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் பிரித்விராஜ் முடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், \”டப்பிங்கின் இறுதிகட்ட சரிபார்ப்பு முடிந்தது. பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பல்வேறு மொழிகளில் எனது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் எனது சொந்தக் குரலைக் கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு பல மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால், ஒரு கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் பேசுவது எனக்கு முதல் முறை. டிசம்பர் 22-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேவாவும், வரதாவும் உங்களைச் சந்திப்பார்கள்\” என்று பதிவிட்டுள்ளார்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…