பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு இன்று டபுள் கொண்டாட்டம் கிடைத்துள்ளது. என்னவென்றால், மூத்த மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை பிரபல நடிகையுமான கரீனா கபூர் திருமணம் செய்து கொண்டார்.
இன்று, சைஃப் அலி கானின் 2வது மனையும் பிரபல நடிகையுமான கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கும் என்றமகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 40 வயதான கரீனா கபூருக்கு ஏற்கனவே என்ற 3 வயது மகன் உள்ள நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.
முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கு சாரா அலி கான் மற்றும் இப்ராஹிம் அலி கான் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி கரீனா கபூர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்
தற்போது அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் நாயகியாக நடித்து வரும் கரீனா கபூர், கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்த பாலிவுட் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.