Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் குறித்து எஸ் ஏ சியிடம் கேட்ட தொகுப்பாளர்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

sa-chandrasekhar-about vijay

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். தளபதி விஜயின் தந்தையான இவர் இயக்குனர்களின் ஆலமரம் என பாராட்டப்பட்டு வருகிறார்.

தளபதி விஜயின் உச்சகட்ட வளர்ச்சிக்கு அவருடைய திறமை முக்கிய காரணமாக இருந்தாலும் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இருந்தபோதிலும் சமீப காலங்களாக விஜய் மற்றும் அவருடைய அப்பா எஸ் சி சந்திரசேகர் என இருவரும் பேசிக் கொள்வதில்லை என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றின் பிள்ளைகள் பெற்றோர்களை மதிப்பதில்லை என பேசியிருந்த நிலையில் அவர் விஜய் தான் குறிப்பிட்டு சொன்னதாக மீண்டும் தகவல்கள் பரவ தொடங்கியன.

இப்படியான நிலையில் இது குறித்து எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் பேசியுள்ளார். அதாவது நான் அன்னைக்கு பொதுவாக தான் சொன்னேன் இதுவரை நான் பல குடும்பங்களை பார்த்துள்ளேன். அதை வைத்து தான் அப்படி சொன்னேன் இந்த விஷயத்தில் தளபதி விஜய் இந்த உலகத்திலேயே சிறந்தவர் என தெரிவித்துள்ளார். மேலும் வாரிசு படத்தின் கதை என்ன என கேட்டதற்கு அது என்ன என்பது எனக்கு தெரியாது. நான் அந்த விஷயங்களில் தலையிடுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உங்களுக்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை என கேட்க யார் வீட்டில் தான் பிரச்சனை இல்லை அப்பா ஒன்று சொன்னால் உங்களுக்கு கோபம் வராதா? இரண்டு மூன்று நாட்கள் கழித்து எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இல்லையா என தொகுப்பாளரிடம் திருப்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

sa-chandrasekhar-about vijay
sa-chandrasekhar-about vijay