Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பூஜையில் விஜய் பங்கேற்காதது ஏன்? கோபமாக பதிலளித்த SA சந்திரசேகர்

sa-chandrasekhar-about-thirukadaiyur-pooja

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகனான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் இவருடைய தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது என்பதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தனது பிறந்த நாளில் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று ஆயுள் விருத்தி வேண்டி பூஜை நடத்தினார். இந்த பூஜையில் தளபதி விஜய் பங்கேற்காதது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

மேலும் இது பற்றி தொடர்ந்து பலர் சந்திரசேகர் அவர்களிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் கோபம் அடைந்து பதில் அளித்துள்ளார். அதாவது அந்த கோவிலுக்கு விஜய் வந்திருந்தால் அங்கே கூட்டம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கூட்டத்தில் நான் வேறு பெண்ணுக்கு தாலி கட்டி இருப்பேன்.

எங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாங்கள் அப்பா மகன். அவர் இதற்காக ஹைதராபாத்தில் இருந்து சூட்டிங் விட்டு விட்டு வர வேண்டுமா? அந்த பூஜையில் அவ்வளவு கூட்டம் தேவையா என பேசி உள்ளார்.

 sa-chandrasekhar-about-thirukadaiyur-pooja

sa-chandrasekhar-about-thirukadaiyur-pooja