Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிறந்தநாளில் விஜய் கலந்து கொள்ளாததர்க்கு இது தான் காரணம்..SAC ஓபன் டாக்

sa-chandrasekhar-about-thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தனது பிறந்த நாளில் விஜய் பங்கேற்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

வாரிசு படத்தின் ஷூட்டிங் ஜூலை 2-ம் தேதி முதல் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அதனால் ஜூலை 1-ம் தேதியே விஜய் கிளம்பி விட்டதாக தெரிவித்துள்ளார். ‌

எஸ் ஏ சந்திரசேகர் இவ்வாறு பேசியதை தொடர்ந்து இதுவும் சர்ச்சையாக மாறி உள்ளது. அதாவது ஷூட் இருப்பதும் தெரியும் அப்பாவின் பிறந்தநாள் என்பதும் அவருக்கு தெரியும். அப்படி இருக்கும்போது முன்கூட்டியே பெற்றோரை சந்தித்து இருக்கலாம். அதுவும் முடியா விட்டாலும் தொலைபேசியில் வாழ்த்து கூறி இருக்கலாம், சமூக வலைதளங்களில் மூலமாக வாழ்த்துக்களை பதிவு செய்து இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

பெற்றோருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஊருக்கு தான் உபதேசம், தனக்கு இல்லை என்பது போல விஜய் நடந்து கொள்வதாக வசை பாடி வருகின்றனர்.

 sa-chandrasekhar-about-thalapathy vijay

sa-chandrasekhar-about-thalapathy vijay