தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன். உலகம் முழுவதும் இவரதுக்கே இசைக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வளவு ஏன் இசையமைப்பாளர் தமன் கூட யுவனின் தீவிர ரசிகர் தான்.
இப்படியான நிலையில் தமன் அளித்த பேட்டி ஒன்றில் யுவன் பற்றி தப்பாக பேசினால் டென்ஷன் ஆகிவிடுவேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர். அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தமன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்துக்கு இசையமைத்ததை தொடர்ந்து தற்போது வாரிசு படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
