இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை வென்று வருகிறது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர்.
இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது.
சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இரண்டு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அதாவது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 6-வது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (Hollywood Critics Association) விருது வழங்கும் விழாவில் சிறந்த சண்டைக்காட்சி மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
And the HCA Award for Best International Film goes to…
???? RRR#RRR #RRRMovie #RamCharan #SSRajamouli #NTRamaRaoJr #HCAFilmAwards #BestInternationalFilm pic.twitter.com/iIetZqb8cS
— Hollywood Critics Association (@HCAcritics) February 25, 2023