சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த பெண் சுப்புலட்சுமி. டிக்டாக்கில் தன் பெயரை சூர்யா என பதிவு செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். அவரின் ரவுடி பேபி வீடியோ பிரபலமானதால் அவரை ரவுடி பேபி சூர்யா என பலரும் அழைத்து வந்தனர்.
அண்மையில் அரசால் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவர் வீட்டில் இருப்பதை கண்டு போலிசில் அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்க போலிசார் வீடு தேடி வந்து கொரோனா பரிசோதனைக்கு அழைத்துள்ளனர்.,
அதை மறுத்தவர், தான் வரும் போதே கோவை விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு கொரோனா நெகட்டிவ் என வந்ததாலேயே வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஆம்புலன்சில் வரமுடியாது, டூவீலரில் வருகிறேன், தனக்கு தனி அறை வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளார். அவரின் வீட்டின் முன் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இந்த செய்தியை பத்திரிக்கை நிருபர் ஒருவர் வெளியிட அவரை சூர்யா வீடியோவில் ஆபாசமாக திட்டியும், அவதூறு பரப்பியும், கொலை மிரட்டலும் விடுத்தாக சொல்லப்பட்டதால், நிரூபரின் புகார் அடிப்படையில் சூர்யா மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால் சூர்யா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதை கண்டு அக்கம்பக்கத்தினர் போலிஸ்க்கு தகவல் அளிக்க பின் போலிசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர்.

