தென்னிந்திய திரை உலகில் மாபெரும் வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் பல முன்னணி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து பிரபல யூட்யூப் சேனலில் நடைபெற உள்ள வட்டமேசை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதாவது, பிரபல யூட்யூப் சேனல் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை திரை பிரபலங்களுடன் வட்டமேசை நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது.
இதில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, சுதா, விஜய், நெல்சன், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியிருந்தனர். இந்நிலையில் அதேபோல் இந்த ஆண்டிற்காக நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், ராஜமௌலி, பிரித்திவிராஜ், கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டணியின் மாசான புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
We’re kicking off roundtable season with this year's epic FC Filmmakers’ Adda with artists of some of the year's biggest hits – here’s presenting – @ikamalhaasan @ssrajamouli @Dir_Lokesh @SwapnaDuttCh @PrithviOfficial @menongautham
Location Courtesy – Taj Wellington Mews, Chennai pic.twitter.com/R0LGqwn9sp— Film Companion (@FilmCompanion) December 2, 2022

