பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல் ஆன “பாரதி கண்ணம்மா” என்னும் தொடரில் கண்ணம்மாவாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். இவர் இந்த சீரியலில் நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் ஒரு துணிச்சலான பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன்பின் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்ததால் தனக்குவந்த பட வாய்ப்புகளை இழந்துள்ளார் அதில் ஒன்றுதான் சூர்யாவின் “ஜெய் பீம்” திரைப்படம். இந்த காரணத்தினால் ரோஷினி சில நாட்களிலேயே அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
தற்போது சினிமாவில் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வரும் ரோஷினி. மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி சீசன் 3” என்ற ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இதன் மூலம் இளம் வயது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
அதையடுத்து ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ரோஷனிக்கு நிறைய ‘ஹாட்டின்’ மற்றும் ‘டார்க் சாக்லேட்’ போன்ற சிம்பல்களை யெல்லாம் பதிவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். ரோஷினியின் இந்த பச்சை நிற ஆடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram

