rockstar anirudh talk about actor dhanush
நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நேற்றைய தினம் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய அனிருத் DandA கூட்டணியில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். அதனால் ட்விட்டரிலும் DandA என்று வைரலாகி வருகிறது. அந்த ‘டி’ இல்லன்னா இந்த ‘ஏ’ இல்லை என்று கூறியுள்ளார். அதாவது அனிரூத்தால் மட்டுமே இந்த வெற்றி கிடைக்கவில்லை. தனுஷால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று நெகிழ்ச்சியோடு அனிரூத் கூறியிருக்கிறார். இதன் மூலம் இவர்களது பழைய நட்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…