ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர். அதனை தொடர்ந்து வெள்ளி திரையிலும் காமெடி நடிகராக கலக்கி வந்தார். பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சில காலம் திரை துறையில் இருந்து விலகி இருந்த இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று எலிமினேஷனும் செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
