தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி சொர்க்கவாசல் என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மத்திய சிறைச்சாலை என்ற பலகையை கையில் வைத்துக்கொண்டு பாலாஜி நிற்பது போல் அந்த போஸ்டர் உள்ளது. சித்தார்த் விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
#Sorgavaasal pic.twitter.com/uilfp4MDwB
— RJ Balaji (@RJ_Balaji) October 19, 2024