Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியலில் இருந்து விலக காரணம் என்ன? ரசிகர்களின் கேள்விக்கு ரியா விஸ்வநாதன் பதில்.

riya-viswanathan-about-raja-rani-2 serial

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முதலில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவரது வெளியேற்றத்துக்கு பிறகு ரியா விஸ்வநாதன் சந்தியாவாக நடிக்க தொடங்கினார்.

இவர் நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில் திடீரென சமீபத்தில் சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக ஆஷா கவுடா சந்தியாவாக நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் ரியா விஸ்வநாதன் ப்ரைம் டைம் சீரியல் அப்படி இருக்கையில் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியது ஏன் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப ரியா நானாகத்தான் வெளியேறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் ரியாவின் இந்த பதில் நிச்சயம் விஜய் டிவிக்கும் அவருக்கும் இடையே ஏதோ பிரச்சனையை உருவாகி உள்ளது, அதனால் தான் வெளியேறியதாக கூறி வருகின்றனர்.

அதே சமயம் இன்னொரு ரசிகர் திருமணம் காரணமாக நீங்கள் சீரியல்ல இருந்து வெளியேறி விட்டதாக கூறுகின்றனர் அது உண்மையா என கேட்க அது முழுக்க முழுக்க வதந்தி எனக்கு திருமணமாக இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

riya-viswanathan-about-raja-rani-2 serial
riya-viswanathan-about-raja-rani-2 serial