Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா.

rithika-with-husband-after-marriage photo

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. டிஆர்பி ரேட்டில் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா தமிழ்ச்செல்வி.

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு கலந்து கொண்ட வேகத்தில் வெளியேறினார்.

இவர் விஜய் டிவியில் பணியாற்றி வரும் வினு என்பவரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியிருந்த நிலையில் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரித்திகா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு அவரும் அவருடைய கணவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.