Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“இன்றைய கஷ்டம் நாளைய சந்தோஷம்”.. பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்ட பதிவு

rithika-left-baakiyalakshmi-serial details

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா தமிழ்ச்செல்வி.

இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான நிலையில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள ரித்திகா இன்றைய கஷ்டம் நாளைய சந்தோஷம் என பதிவு செய்ய உடல் எடை கூடியதால் இவரை வெளியேற்றி விட்டார்களா என்ற கேள்வியும் குழப்பமும் எழுந்துள்ளது.

அதோடு ஏற்கனவே கோபி அமிர்தா கேரக்டர் நெகடிவ்வாக மாற போவதாக சொன்ன நிலையில் நெகட்டிவ் கேரக்டர் செட்டாகாது என விலகி விட்டாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.