Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிச்சலான வீரன்.. கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

released-karthik-character-in-ponniyin-selvan movie

தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்டமான கதை களத்தோடு உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான தகவல்களை அவ்வப்போது பட குழு இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு கார்த்தியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், “ராஜ்ஜியம் இல்லா இளவரசன், உளவாளி, துணிச்சலான வீரர்… இதோ வந்தியத்தேவன்! என்று குறிப்பிட்டுள்ளனர்”. இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.