தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நியூ படத்தை தொடர்ந்து தற்போது கோட் படத்தில் நடிக்க வருகிறார்.
மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் ஈடுபட இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். புரூஸ் லீ ஆனந்த் தலைமையில் இன்று முதல் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தளபதி விஜயின் பிட்னஸ் குறித்த தகவல்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது. ஆமாம் எப்பவும் இரவு 7 மணிக்கு டின்னரை முடித்து விடுவது 9.30 மணிக்கு தவறாமல் தூங்கி விடுவது தான் அந்த சீக்ரெட் என சொல்லப்படுகிறது.
அது மட்டும் இன்றி அசைவம் அதிகம் பிடிக்கும் என்றாலும் தற்போதயெல்லாம் அதை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர். தோசை மிகவும் பிடிக்கும் என்றாலும் இரண்டு தோசைக்கும் மேல் சாப்பிட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரியான நேரத்தில் வேலை, சரியான நேரத்தில் உணவு, சரியான நேரத்தில் ஓய்வு என்பதுதான் அவருடைய பிட்னஸ் ரகசியம் என தெரிய வந்துள்ளது.

reason behind thalapathy vijay fitness